அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸுக்கு வடக்கில் புதன்கிழமை (22) பரவிய ஒரு புதிய காட்டுத் தீயானது 9,400 ஏக்கருக்கும் (38 சதுர கி.மீ.) அதிகமாக பரவியது.
பலத்த காற்று மற்றும் உலர் மரங்களால் தூண்டப்பட்ட காட்டத் தீ 31,000 க்கும் மேற்பட்ட மக்களை அவர்களில் சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றும் உத்தரவுகளை கட்டாயப்படுத்தியது.
புதன்கிழமை காலை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் வடமேற்கே 45 மைல் தொலைவில், பல குடியிருப்புப் பகுதிகள் மற்றும் பாடசாலைகளை அண்மதித்துள்ள மலைப் பகுதியில் உள்ள காஸ்டைக் ஏரிக்கு அருகில் ஹியூஸ் தீ மூண்டது.
எவ்வாறெனினும் இந்த தீப்பரவலினால் வீடுகள் அல்லது வணிகங்கள் எதுவும் சேதமடையவில்லை, மேலும் தீயை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து தீயணைப்பு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
சுமார் 31,000 பேர் கட்டாய வெளியேற்ற உத்தரவுகளின் கீழ் உள்ளனர் என்று லாஸ் ஏஞ்சல்ஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதேநேரம், ஏஞ்சல்ஸ் தேசிய வனமானது சான் கேப்ரியல் மலைகளில் உள்ள அதன் 700,000 ஏக்கர் (2,800-ச.கி.மீ) பூங்கா பார்வையாளர்களுக்கு மூடப்பட்டதாகக் கூறியது.
சிவப்புக் எச்சரிக்கையின் விளைவாக, வேகமாக நகரும் தீயை எதிர்பார்த்து போராடுவதற்காக தெற்கு கலிபோர்னியாவைச் சுற்றி சுமார் 1,100 தீயணைப்பு வீரர்கள் நிறுத்தப்பட்டதாக மாநில வனவியல் மற்றும் தீ பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
இது தவிர 4,000 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஹியூஸ் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி தீயணைப்புத் தலைவர் ஆண்டனி மர்ரோன் கூறியுள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் பல சுற்றுப்புறங்களை அழித்த எரிந்து கொண்டிருக்கும் பெரிய காட்டுத் தீக்கு மத்தியில் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.