நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழீழ விடுதலை புலிகள் தலைவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்ததே நான்தான் என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சீமானின் புகைப்படம் குறித்த ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கூறி வந்தனர்.
இதனிடையே, 15 ஆண்டுகளுக்கு முன் வெளியான புகைப்படம் அது. 15 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்கள்.. தமிழீழ விடுதலை புலிகள் தலைவருடன் நான் எடுத்த புகைப்படம் போலி என்கிறார்கள்.. அதற்கான ஆதாரத்தை வெளியிடுங்கள் என்று சீமான் கூறியிருந்தார்.
இதை தொடர்ந்து, தமிழீழ விடுதலை புலிகள் தலைவர்-சீமான் சந்திப்பு படம் எடிட் செய்யப்பட்டதற்கு என்ன ஆதாரம் உள்ளது என சீமான் கேட்டுள்ளார். இவன், 15 ஆண்டாக எங்கு இருந்தார் எனவும் கேட்டிருக்கிறார். இருவரது சந்திப்பு படம், எடிட் செய்யப்பட்டது. அதுவே ஒரு ஆதாரமாகத்தான் எடுத்துக்காட்டுகிறோம். அதுக்கு ஒரு ஆதாரத்தை எங்கிருந்து எடுத்துக்காட்டுவது. ஆதாரத்துக்கு ஒரு ஆதாரம் தேவையா? இந்த புகைப்படத்தை எப்படி எடிட் செய்தான் என டெமோ காண்பிக்க சொல்கிறார்.
உலகம் முழுவதும் புகைப்படம் எப்படி எடிட் செய்யப்படுகிறது என்பதை காண்பித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். நண்பர் செங்கோட்டையனை இதுபற்றி ஏன் பேசவிடாமல் தடுத்துள்ளனர். அவருடன் பேசும் அனைத்தும் பதிவு செய்யப்படுகிறது. அந்த ஆடியோ பதிவை வெளியிடட்டும். நான் என்ன பேசினேன் என்பது தெரிந்து விடும் என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்தார்.
இந்த நிலையில், இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறியதாவது:-
* தமிழீழ விடுதலை புலிகள் தலைவருக்கு ரத்த உறவு கிடையாது. லட்சிய உறவு தான். அந்த லட்சிய உறவு என்று பார்த்தால் இந்த மண்ணில் முதல் சொந்தக்காரன் அவருக்காக போராடி இறந்தவர். இப்போது அவரது லட்சியத்துக்காக நிற்கிற நாங்கள் எல்லாம் தான் அவரது ரத்த உறவு.
* கார்த்திக் மனோகர் சொல்வதற்கு பதில் நான் சொல்ல வேண்டியதில்லை. உலகெங்கும் இருக்கிற என்னோட சொந்தங்கள் சொல்லிவிடுவார்கள்.
* தமிழீழ விடுதலை புலிகள் தலைவரை சந்தித்தது குறித்து யாருக்கு நிரூபிக்க வேண்டி இருக்கு. எனக்கு அவசியம் இல்லை என்றார்.
இந்நிலையில், புகைப்படம் இருந்த ஹார்ட் டிஸ்கை வாங்கி கொடுத்ததே நான்தான் என்று திமுக மாணவரணித் தலைவர் ராஜீவ் காந்தி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.