• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
மீனவர்கள் மீதான துப்பாக்கி சூடு; கடும் கண்டனத்தை வெளியிட்ட இந்தியா!

மீனவர்கள் மீதான துப்பாக்கி சூடு; கடும் கண்டனத்தை வெளியிட்ட இந்தியா!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/01/28
in ஆசிரியர் தெரிவு, இந்தியா, தமிழகம், முக்கிய செய்திகள்
69 1
A A
0
30
SHARES
996
VIEWS
Share on FacebookShare on Twitter

செவ்வாய்கிழமை (28) அதிகாலை 13 இந்திய மீனவர்கள் சம்பந்தப்பட்ட இலங்கை கடற்படையின் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நெடுந்தீவுக்கு அருகேயுள்ள கடற்பரப்பில் இன்று அதிகாலை இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவர்களை கைது செய்ய முயன்றபோது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இந்தப் துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது இரண்டு மீனவர்கள் பலத்த காயம் அடைந்தனர்.

காயமடைந்த மீனவர்கள் தற்சமயம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் மூன்று மீனவர்களும் சிறு காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் காயமடைந்த மீனவர்களை வைத்தியசாலையில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்துள்ளனர்.

மேலும், மீனவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றர் என்றும் அமைச்சு அந்த அறிக்கையில் குறிப்பட்டுள்ளது.

இந்த நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பதிலளிக்கும் விதமாக, இந்திய வெளிவிவகார அமைச்சர் புதுடெல்லியில் உள்ள இலங்கையின் தற்காலிக உயர்ஸ்தானிகரை வரவழைத்து, சம்பவம் குறித்து கடும் கண்டனத்தை பதிவு செய்தார்.

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இந்த விடயத்தை இலங்கை அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சிடமும் எழுப்பியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்வாதாரக் கவலைகளை மனதில் கொண்டு, மீனவர்கள் தொடர்பான பிரச்னைகளை மனிதாபிமானமாக கையாள வேண்டியதன் அவசியத்தை இந்திய அரசு எப்போதும் வலியுறுத்தி வருகிறது.

எந்தச் சூழ்நிலையிலும் பலத்தை பயன்படுத்துவதை ஏற்க முடியாது. இது தொடர்பாக இரு அரசாங்கங்களுக்கும் இடையே இருக்கும் புரிந்துணர்வுகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

blank

blank

இலங்கை கடற்படையின் அறிக்கை

2025 ஜனவரி 27, அன்று, யாழ்ப்பாணத்தின் வெல்வெட்டித்துறைப் பகுதியிலிருந்து இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த ஏராளமான இந்திய மீன்பிடிக் கப்பல்களை வடக்கு கடற்படைக் கட்டளை அவதானித்து.

அந்த கட்டளைக்கு சொந்தமான கடற்படையின் கப்பல்களை அனுப்புவதன் மூலம் அந்த மீன்பிடி படகுகளை நாட்டின் கடல் எல்லையில் இருந்து அகற்றும் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அங்கு குறித்த கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு மீன் வளங்களை சேகரித்துக்கொண்டிருந்த பதின்மூன்று (13) இந்திய மீனவர்களுடன் இந்திய மீன்பிடி படகொன்றும் (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

இந்திய மீன்பிடிக் கப்பலை கடற்படையினர் கைது செய்யவிருந்த போது, கடற்படையினரின் சட்ட உத்தரவை மீறியதாலும், மேலும் கலவரமான நடத்தையாலும் கடற்படைக் குழுவொன்று கப்பலில் ஏறியுள்ளது.

கப்பலுக்குள் கடற்படையினர் ஏற விடாமல் தடுக்கும் வகையில் இந்திய மீனவர்கள் அதற்கு செவிசாய்க்காமல், வழக்கமான பணிகளுக்கு இடையூறு விளைவித்து, கடும் எதிர்ப்பை காட்டி, மீன்பிடி கப்பலை ஆக்ரோஷமாக கையாண்டதால், இந்திய மீனவர்கள் கலவரத்தில் ஈடுபட்டதுடன், கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி கப்பலில் ஏறும்போது, கடற்படை வீரர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் மீனவர்கள் குழு ஆக்ரோஷமாக தாக்க முயன்றது.

கடற்படை அதிகாரி ஒருவரிடமிருந்து துப்பாக்கியைப் பறிக்க முற்பட்ட போது, அந்த துப்பாக்கியின் செயல்பாட்டினால் இரண்டு மீனவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகினர்.

கடற்படையினரால் இரு மீனவர்களுக்கும் அடிப்படை முதலுதவிகளை வழங்கியதையடுத்து, மேலதிக சிகிச்சைக்காக உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

குறித்த மீனவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என யாழ்ப்பாணம் வைத்தியசாலை உறுதிப்படுத்தியுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கடற்படையினர் காங்கேசன்துறை பொலிஸில் முறைப்பாடும் செய்துள்ளனர்.

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய மீன்பிடி படகு மற்றும் எஞ்சிய பதினொரு (11) மீனவர்கள் இன்று (2025 ஜனவரி 28,) காலை காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ். மயிலடி மீன்பிடி பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

Related

Tags: FishermenINDIAஇந்தியாமீனவர்கள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாட்டில் வீழ்ச்சியடைந்து வரும் காற்றின் தரம்!

Next Post

அமெரிக்காவை ஆட்டம் காண வைத்துள்ள சீனாவின் `Deepseek`

Related Posts

ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!
இலங்கை

ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!

2026-03-17
கியூபெக் வரவு செலவுத் திட்டம்: தேர்தலுக்கு முந்தைய ‘நிதானமான’ நிதிநிலை அறிக்கை!
உலகம்

கியூபெக் வரவு செலவுத் திட்டம்: தேர்தலுக்கு முந்தைய ‘நிதானமான’ நிதிநிலை அறிக்கை!

2026-03-17
மத்திய கிழக்கு யுத்தம்: உணவுப் பஞ்சம் எனும் அடுத்த போர்க்களம்!
உலகம்

மத்திய கிழக்கு யுத்தம்: உணவுப் பஞ்சம் எனும் அடுத்த போர்க்களம்!

2026-03-17
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

மோசடி கும்பல் மீது சுற்றிவளைப்பு: 134 வெளிநாட்டவர்கள் கைது

2026-03-17
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து  வௌியேறினார் கோட்டா!
இலங்கை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய , சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம்

2026-03-17
இரவு நேரத் தொழில் பயிற்சிக் கூடங்களை நிறுவத் திட்டம் – அநுர குமார
இலங்கை

ஜனாதிபதியின் விசேட உரை! இன்று இரவு 7.30 மணிக்கு

2026-03-17
Next Post
அமெரிக்காவை ஆட்டம் காண வைத்துள்ள சீனாவின் `Deepseek`

அமெரிக்காவை ஆட்டம் காண வைத்துள்ள சீனாவின் `Deepseek`

விமானப்படைத் தளபதியுடன் பிரதமர் சந்திப்பு!

விமானப்படைத் தளபதியுடன் பிரதமர் சந்திப்பு!

176 பயணிகளுடன் சென்ற விமானம் தீப்பிடிப்பு!

176 பயணிகளுடன் சென்ற விமானம் தீப்பிடிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01

ஜனாதிபதியின் விசேட ஊடக சந்திப்பு

0
அதிகரித்த வெப்ப நிலை – ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!

அதிகரித்த வெப்ப நிலை – ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!

0
முச்சக்கரவண்டியொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

முச்சக்கரவண்டியொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

0
ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!

ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!

0
கியூபெக் வரவு செலவுத் திட்டம்: தேர்தலுக்கு முந்தைய ‘நிதானமான’ நிதிநிலை அறிக்கை!

கியூபெக் வரவு செலவுத் திட்டம்: தேர்தலுக்கு முந்தைய ‘நிதானமான’ நிதிநிலை அறிக்கை!

0

ஜனாதிபதியின் விசேட ஊடக சந்திப்பு

2026-03-17
அதிகரித்த வெப்ப நிலை – ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!

அதிகரித்த வெப்ப நிலை – ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!

2026-03-17
முச்சக்கரவண்டியொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

முச்சக்கரவண்டியொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

2026-03-17
ஹோர்முஸ் விவகாரம் : எவரின் உதவியும் தேவையில்லை – ட்ரம்ப்

ஹோர்முஸ் விவகாரம் : எவரின் உதவியும் தேவையில்லை – ட்ரம்ப்

2026-03-17
ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!

ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!

2026-03-17

Recent News

ஜனாதிபதியின் விசேட ஊடக சந்திப்பு

2026-03-17
அதிகரித்த வெப்ப நிலை – ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!

அதிகரித்த வெப்ப நிலை – ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!

2026-03-17
முச்சக்கரவண்டியொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

முச்சக்கரவண்டியொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

2026-03-17
ஹோர்முஸ் விவகாரம் : எவரின் உதவியும் தேவையில்லை – ட்ரம்ப்

ஹோர்முஸ் விவகாரம் : எவரின் உதவியும் தேவையில்லை – ட்ரம்ப்

2026-03-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.