கார்த்திக் என்பவர் தன்னை காதலித்து ஏமாற்றவிட்டதாக இணையத்தில் நிறைய வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் திவ்யா கள்ளச்சி என ரசிகர்களால் அழைக்கப்படும் திவ்யா.
இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறுவர்களை பாலியல் சீண்டலில் ஈடுபட வைத்து அதனை படம்பிடித்து, அதன் மூலம் பணம் பறிக்க முயற்சித்த யூடியூபர் திவ்யா மீது சில நாட்களுக்கு முன்பு சித்ரா என்பவர் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் திவ்யா, கார்த்தி உள்ளிட்ட 4 பேரை பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் போக்சோ உட்பட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் பொலிஸ் நிலைய அதிகாரிகள் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், அண்மையில் திவ்யா கள்ளச்சிக்கு எதிராக புகார் தெரிவித்திருந்த சித்ராவையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அதாவது, திவ்யா மற்றும் கார்த்தி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் ரீல்ஸ் எடுப்பதற்காக வந்துள்ளனர். கார்த்தியின் நண்பரான சித்ரா அந்த பகுதியில் உள்ள சிறுவர்கள் இணைந்து பாலியல் சீண்டலில் ஈடுபடுவது போன்ற வீடியோவை எடுத்து தனக்கு அனுப்பி வைக்கும்படி அவரிடம் தெரிவித்துள்ளார்.
அதன்படி திவ்யா , ஆனந்த் என்பவரின் உதவியுடன் இரண்டு சிறுவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது போல் படம் எடுத்து சித்ராவிற்கு அனுப்பியுள்ளார். இந்த வீடியோவை காட்டி திவ்யா கள்ளச்சியிடம் சித்ரா பணம் கேட்டு மிரட்டியதாக சொல்லப்படுகிறது.