கஜபா படையணியின் மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க ,இலங்கை இராணுவத்தின் 66 வது பதவி நிலை பிரதானியாக நேற்று உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இராணுவத்தில் 35 ஆண்டுகள் சேவையாற்றிய மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க, தனது பணிக்காலத்தில் ஏராளமான கட்டளை, பணிநிலை மற்றும் பயிற்றுவிப்பாளர் பதவிகளை வகித்துள்ளார்.
இதேவேளை தாய்நாட்டை பயங்கரவாதத்திலிருந்து விடுவிப்பதற்கு பங்காற்றியமைக்காக அவருக்கு ரண விக்கிரம பதக்கம் மற்றும் ரண சூர பதக்கம் என்பன வழங்கப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.















