கவுதமாலாவில் உள்ள எல் ரான்ச்சோ என்ற கிராமத்தில் நேற்று 75 பயணிகளுடன் பயணித்த பேருந்தொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 51 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இச்சம்பவம் குறித்து அந்நாட்டு ஜனாதிபதி பெர்னார்டோ கவலை தெரிவித்துள்ளதுடன் நாடளாவிய ரீதியில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.