நல்லதொரு வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுமென பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்புத்துறை அமைச்சர் சமன்த வித்தியாரட்ன தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டம் தொடர்பாக கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”கடந்த அரசாங்கங்களைப் போன்றல்லாது சம்பள அதிகரிப்பினை அடிப்படைச் சம்பளத்துடன் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் முதல் தடவையாக அரசியல்வாதிகளின் சம்பளங்களைக் குறைத்து அவற்றை பொதுமக்களின் தேவைக்காக பயன்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது வரவு செலவுத் திட்டம் என்றால் என்ன என்பதை இம்முறை வரவு செலவுத் திட்த்தில் காண்பிப்போம் எனவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.