மாலைத்தீவுகளின் வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா கலீல் (Abdulla Khaleel) பெப்ரவரி 18 முதல் 21 வரையில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இவ்விஜயத்தின் போது, மாலைத்தீவுகளின் வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் பேராசிரியர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்திக்கவுள்ளார்.
மாலைத்தீவுகளின் வெளிவிவகார அமைச்சர், அவரது குழுவினர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத்துடன், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சில் உத்தியோகபூர்வ இருதரப்பு கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவுள்ளனர்.
வெளிவிவகார அமைச்சர் கலீலுடன் மாலைத்தீவுகளின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாத்திமத் இனாயாவும் வருகை தரவுள்ளாதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.