பேக்கரி பொருட்களின் விலைகளைக் குறைப்பது குறித்து இன்று முடிவு எடுக்கப்படும் என்று அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் என்.கே., இந்த விடையத்தை தனது சங்க உறுப்பினர்களுடன் விவாதிப்பதாகக் கூறியுள்ளார்
இதேவேளை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் ரொட்டி மாவின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் விலைக் குறைப்பு குறித்து வர்த்தக அமைச்சருக்கு ஏற்கனவே தகவல் தெரிவித்துள்ளதாகவும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன