2025 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (18) ஆரம்பமாகியுள்ளது.
நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தை நாடாளுமன்றில் நேற்று சமர்ப்பித்தார்.
நேற்று காலை 10.30 மணிக்கு வரவுசெலவுத்திட்டத்துடன் ஜனாதிபதி நாடளுமன்றத்தில் உள்ள ஜனாதிபதியின் அலுவலகத்திலிருந்து பாரம்பரியத்திற்கு அமைய படைக்கல சேவிதர் அழைத்துவர சபா மண்டபத்திற்குள் வருகைதந்தார்.
இதனைத் தொடர்ந்து பி.ப 1.15 மணிவரை ஜனாதிபதி வரவுசெலவுத்திட்ட உரையை நிகழ்த்தினார்.
இதற்கு அமைய 2025 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் இன்று திகதி முதல் 25ஆம் திகதி வரை 22 ஆம் திகதி சனிக்கிழமை உள்ளடங்கலாக ஏழு நாட்கள் இடம்பெறவுள்ளது.
அத்துடன் பெப்ரவரி 25 ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
இதனைத் தொடர்ந்து நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் குறித்த குழுநிலை விவாதம் பெப்ரவரி 27 ஆம் திகதி முதல் மார்ச் 21 ஆம் திகதி வரை 4 சனிக்கிழமை நாட்கள் உள்ளடங்கலாக 19 நாட்கள் இடம்பெறவுள்ளன.
இதற்கான வாக்கெடுப்பு மார்ச் 21 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடத்தப்படவுள்ளது.
இதற்கமைய நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான விவாதம் பெப்ரவரி 18 ஆம் திகதி முதல் மார்ச் 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.