வட்டவளை பெருந்தோட்டத்துக்குரிய உடுகம ஹோமாதொல தோட்டத்தில் காபில் பிரிவில் சேவையாற்றும் காமினி கிங்ஸ்லி என்ற தோட்ட உத்தியோகஸ்த்தர் ஒருவர், அதே தோட்ட பகுதியில் லயன் அறையில் வாழும் தமிழ் இளைஞர் மீது மனிதாபிமானமற்ற வகையில் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் குறித்த இளைஞர் மீது அவர் நாயை ஏவி கடிக்க வைத்த விவகாரமும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் குறித்த தொடர்பாக கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். நேற்று நாடாளுமன்த்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இதன் போது அரசாங்கத்தைத் தாக் குறை கூறவில்லை எனத் தெரிவித்த மனோ கணேசன்” தோட்ட நிர்வாகங்கள் முறையற்ற வன்மமான செயல்களில் ஈடுபடுகின்றன எனவும், ஒரு இளைஞனை நிலத்தில் தள்ளி நாய்களை கடிப்பதற்கு ஏவி விடுவது முற்றிலும் தவறு எனவும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தெற்கில் வாழும் பெருந்தோட்ட மக்களுக்கு தான் இவ்வாறான மனிதாபிமானமற்ற தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன எனவும், தெற்கு பகுதியில் பெண்களை அவமானத்துக்கு உட்படுத்தும் செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஹோமாதொல தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் முறையான விசாரணை செய்து நீதிமன்றத்துக்கு குற்றவாளிகளை முன்னிலைப்படுத்துமாறு கோரிய மனோ கனேசன் இந்த சம்பவம் தொடர்பான காணொளியை பார்த்து எனது மனைவி கண்ணீர் விட்டு அழுதார் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த சம்பவமானது மாறி நடந்திருந்தால் கலவரமே தோற்றம் பெற்றிருக்கும் எனவும் ஆகவே இச்சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.