இடைநீக்கம் செய்யப்பட்ட பிறகு அல்லது சேவையை விட்டு வெளியேறிய பிறகு மீண்டும் பணியில் சேரும் அதிகாரிகள், போதைப்பொருள் பயன்பாட்டைக் கண்டறிய மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது
அதன்படி பொலிஸ் ஊடகப் பிரிவு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளதுடன் பொலிஸ் அதிகாரிகள், பணியமர்த்தப்படுவதற்கு அல்லது மீண்டும் பணியில் அமர்த்தப்படுவதற்கு முன்பு, போதைப்பொருள் பயன்பாட்டைக் கண்டறிய பொலிஸ் மருத்துவமனையில் பொருத்தமான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என அனைத்து மூத்த அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு பதில் பொலிஸ்மா அதிபர் அறிவித்துள்ளார்.
மேலும் மருத்துவ அறிக்கையில் ஒரு அதிகாரி போதைப்பொருள் பயன்படுத்தியதாக தெரியவந்தால், அந்த அதிகாரி மீண்டும் பணியில் சேர்க்கப்படமாட்டார் அல்லது பணியில் மீண்டும் சேர அனுமதிக்கப்படமாட்டார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்