வெளிநாட்டு துப்பாக்கிகள், துப்பாக்கி ரவைகளுடன் சந்தேகநபர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் நேற்று (17) பிற்பகல் கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹீனட்டியான பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 54 வயதான மினுவாங்கொட பிரதேசத்தில் வசிக்கும் ஹீனட்டியான பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில், நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வரும் குற்றச் செயல்கள், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை சோதனையின் ஒரு பகுதியாக இந்த கைது இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.