முல்லைத்தீவு, முள்ளியவளை, முறிப்பு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் மூவரைப் பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர்.
முல்லைத்தீவு முள்ளியவளை முறிப்பு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவருக்கும் ஒரு குழுவினருக்குமிடையில் கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற கைகலப்பில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி கடந்த 14 ஆம் திகதி உயிரிழந்துள்ள நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் சந்தேகநபர்கள் மூவரை நேற்றிரவு பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் முறிப்பு பகுதியை சேர்ந்த 47,52, 21 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.