பொலிவியாவின் மலைப்பாதையில் பஸ் விபத்துக்குள்ளானதில் 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாகனம் தென்மேற்கு மாவட்டமான யோகல்லாவில் சுமார் 800 மீற்றர் (2625 அடி) பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் நான்கு குழந்தைகள் உட்பட 14 பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர் மருத்துவமனை அதிகாரி ஒருவர் சர்வதேச ஊடகங்களிடம் உறுதிபடுத்தியுள்ளார்.
பொலிவியாவின் மலைப்பகுதிகளில் ஆபத்தான சாலைகள் உள்ளன.
இந்த விபத்து Potosí மற்றும் Oruro நகரங்களுக்கு இடையே நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதிவேகமாக பயணித்ததால், சரதியின் கட்டுப்பாட்டை இழந்து பஸ், பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டில் இதுவரை தென் அமெரிக்க நாட்டில் பதிவான மிக மோசமான சாலை விபத்து இதுவாகும்.