மட்டக்களப்பில் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கணவருக்கு உணவு பொருட்களுடன் ஐஸ் போதைப் பொருளை மறைத்து வைத்துக் கொடுக்க முயன்ற 27 வயதுடை பெண்ணை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
ஐஸ் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபரை பார்ப்பதற்காக வருகை தந்திருந்த மனைவியே இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கொண்டுவந்திருந்த உணவுப் பொருளை சோதனையிட்ட போதே அதில் ஐஸ் போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் குறித்த பெண்ணை நீதிமன்றில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.