கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிவரும் பொலிஸ் அதிகாரி ஒருவர் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் குற்றவியல் மற்றும் நீதிமன்றப் பணிகள் பிரிவில் கடமையாற்றிவந்த பாதெனிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கனேமுல்ல சஞ்சீவ துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தற்போது தலைமறைவாகியுள்ள சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி வீரசிங்கவுடன் அவர் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதுடன் அவரை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளும் தொடர்வதாகவும் பொலிஸ்சார் குறிப்பிட்டுள்ளனர்.