பேராதனை, கிரிபத்கும்புர பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியில் 650 ரூபா பெறுமதியான பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (23) கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் பேராதனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியவர் என தெரிவிக்கப்படுகிறது.
பல்பொருள் அங்காடியில் பல்வேறு பொருட்களை கொள்வனவு செய்து வந்த சந்தேகநபர் தேயிலை பக்கெட், சிறிய ஷாம்பு போத்தல் ஆகியவற்றை திருடிச் சென்றமை அங்குள்ள சிசிடிவி கமெராவில் பதிவாகியிருந்தது.
பல்பொருள் அங்காடியின் பாதுகாப்பு அதிகாரிகள் பொலிஸ் அதிகாரியை சோதனையிட்டனர், பின்னர் அவர் திருடப்பட்ட பொருட்களுடன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
சந்தேக நபர் இன்னும் இரண்டு வருடங்களில் ஓய்வு பெறவுள்ள பொலிஸ் உத்தியோகத்தர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறெனினும், இது தொடர்பான விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.