தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம்வந்து கொண்டிருப்பவர் சாய்பல்லவி . அண்மையில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் “அமரன்” ” தண்டல்” என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் திரைப்படங்களை வழங்கியிருந்தார். தற்போது ஹிந்தியில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் “ராமாயணா ” என்ற திரைப்படத்தில் நடித்தது வருகிறார்.
இந்நிலையில் ஹிந்தியில் முன்னணி நடிகராக விளங்கும் அமீர்கானின் மகன் ஜீனைத் கானுக்கு ஜோடியாக ஒரு காதல் கதையில் சாய்பல்லவி நடித்திருக்கிறாராம். இத் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே முடிவுற்ற நிலையில்” ராமாயணா ” திரைப்பட த்திற்கு முன்னராகவே இத் திரைப்படம் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது . அது ஒரு சிறந்த காதல் கதையாக இருக்கும் என்று நம்புவதாக நடிகர் அமீர்கான் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் தமிழில் வெளியாகி இளையோர் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமான “லவ்டுடே ” திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கான “லவ்வேபா ” என்ற திரைப்படத்தின் மூலம் ஜீனைத் கான் அறிமுகமாகியிருந்தார் . ஆ னால் அத்திரைப்படம் படுதோல்வி அடைந்திருந்தது . இதில் அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீ தேவியின் மகள் குஷி கபூர் நடித்திருந்தார்.
சினிமாவில் வெற்றியும் தோல்வியும் வந்தே தீரும் . அவற்றை சந்தித்து தான் கடக்க வேண்டும் என்று தனது மகனின் முதல் படம் தோல்வி அடைந்தது குறித்து அமீர்கான் ஒரு முறை கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.