மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இம்மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இதனை அறிவித்துள்ளது
அதன்படி பெட்ரோல் 92 ஒரு லீற்றர் 309 ரூபாவுக்கும், பெட்ரோல் 95 ஒரு லீற்றர் 371 ரூபாவுக்கும், டீசல் ஒரு லீற்றர் 286 ரூபாவுக்கும், சூப்பர் டீசல் ஒரு லீற்றர் 331 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மண்ணெண்ணெய் 183 ரூபாவுக்கும் தொடர்ந்தும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது