இலங்கை தடகள சங்கத்தினால் (Sri Lanka Athletics Association) நடத்தப்பட்ட ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த சுமேத ரணசிங்க 85.78 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து தான் படைத்த சாதனையை முறியடித்துள்ளார்.
தியகமவில் நடைபெற்று வரும் தேசிய தடகள தேர்வுப் போட்டியின் இரண்டாம் கட்டத்தின் போதே அவர் இச்சாதனையை தம் வசப்படுத்தினார்.
இதேவேளை குறித்த சாதனையை அடுத்து உலக தடகள செம்பியன்ஷிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பினையும் அவர் பெற்றுள்ளார்.
சுமேத ரணசிங்க, கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்ற தேர்வுப் போட்டியின் போது 82.56 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து சாதனை படைத்தார்.
இந்நிலையில் அவர் படைத்த சாதனையை அவரே முறியடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.