வடக்கின் பெரும் சமர் என அழைக்கப்படும் பரி யோவான் கல்லூரிக்கும் யாழ். மத்திய கல்லூரிக்கும் இடையில் நேற்று நடைபெற்ற போட்டியில் பரி யோவான் கல்லூரி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ். மத்திய கல்லூரி, அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து தமது முதலாவது இன்னிங்ஸில் 131 ஓட்டங்களை பெற்றது.
தொடர்ந்து, துடுப்பெடுத்தாடிய பரி யோவான் கல்லூரி தமது முதலாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 181 ஓட்டங்களை பெற்றது.
இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது இன்னிங்ஸில் யாழ். மத்திய கல்லூரி 142 ஓட்டங்களை பெற்றது.
தொடர்ந்து, 93 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பரி யோவான் கல்லூரி,5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.