சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசு, தன்னார்வ ஊழியர்களுக்கு, இனி மாணவர் கடன் சலுகை வழங்கப்படாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார.
அமெரிக்காவில் அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகளில் பணிபுரிவதை ஊக்கப்படுத்தும் வகையில் கடந்த 2007ம் ஆண்டு திட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டது.
அதன்படி அரசு மற்றும் தன்னார் அமைப்புகளில் பொதுச் சேவையாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் மாணவர் கடனை 10 ஆண்டுகள் முறையாக திருப்பி செலுத்தினால் எஞ்சிய காலத்திற்கான அவர்களின் கடன் தொகை முழுமையாக இரத்து செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.