2025ஆம் ஆண்டுக்கான தெற்காசிய காற்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடரை நடத்தும் உரிமை இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை காற்பந்து சம்மேளனத்தின் (FFSL) தலைவர் ஜஸ்வர் உமரின் முறையான கோரிக்கையைத் தொடர்ந்து, SAFF தெற்காசிய காற்பந்து கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளால் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை இறுதியாகக் கடந்த 2008 ஆம் ஆண்டு SAFF தெற்காசியக் காற்பந்து கூட்டமைப்பு சம்பியன்ஷிப் தொடரை நடத்தியது. 17 வருட நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் குறித்த தொடரை நடத்துவதற்கு இலங்கைக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் குறித்த தொடரானது எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.