எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில், நெடுந்தீவு கடப்பரப்பில் வைத்து தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை கைது செய்யப்பட்ட மீனவர்களை விசாரணைகளின் பின்னர், நீதிமன்றில் ஆஜர் படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.