பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கான முன்மொழிவைத் தொடர்ந்து, அந்தப் பதவிக்காக ஏழு மூத்த பொலிஸ் மா அதிபர் இடையே பனிப்போர் ஆரம்பமாகியுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
அதன்படி தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, லலித் பத்திநாயக்க சஞ்சீவ மெதவத்த, ரன்மல் கொடிகுணு, சஞ்சீவ தர்மரத்ன, கித்சிறி ஜெயலத் மற்றும் எம்.ஜி.ஆர் எஸ். தமிந்த ஆகியோர் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
மேலும் அடுத்து நியமிக்கப்படவுள்ளவர் இந்த நாட்டின் 37வது பொலிஸ் மா அதிபர் ஆவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளடன் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டால், ஜனாதிபதி அவரை பதவியில் இருந்து நீக்குவார். அத்துடன் நியமிக்கப்படும் அடுத்த பொலிஸ் மா அதிபர் ஜனாதிபதியால் அரசியலமைப்பு சபைக்கு பரிந்துரைக்கப்படுவார் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.