நாளை புதன்கிழமை அதாவது ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி முதல் பிரித்தானியா வரும் ஐரோப்பிய பயணிகள் மின்னணு பயண அனுமதி (ETA) ஒன்றை வைத்திருப்பது கட்டாயமாக்கப்படுகிறது.
நாளை முதல் பிரித்தானியா வரும் ஐரோப்பிய பயணிகள் அனைவரும் The Electronic Travel Authorisation (ETA) என்னும் மின்னணு பயண அங்கீகாரம் பெற்றிருக்கவேண்டும்.
இரண்டு ஆண்டுகள் செல்லுபடியாகும் இந்த மின்னணு பயண அங்கீகாரத்துக்கான கட்டணம் 10 பவுண்டுகள் ஆகும்.
ஆனால் 9ஆம் திகதி முதல் இந்தக் கட்டணத்தை 16 பவுண்டுகளாக உயர்த்த பிரித்தானிய உள்துறை அலுவலகம் முடிவு செய்துள்ளது.
இந்த அனுமதி சீட்டை அயர்லாந்து நாட்டவர்கள் தவிர மற்றவவர்கள் ஒரு முறை பெற்றால் 2 வருடங்கள் செல்லுபடியாகும் என தெரிவிக்கபட்டுள்ளது. இதன் மூலம் ஒரு முறை பிரித்தானியா சென்றால் அதிகபட்சம் 6 மாதங்கள் தங்கி இருக்கலாம் என தெரிவிக்கபடுகின்றது.
வயது வராத சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கும் இந்த அனுமதி பெறுவது கட்டாயம் என்பதை கவனத்தில் கொள்வது நல்லது.