இரண்டாம் உலகப்போரில் ரஷ்யா வெற்றி பெற்றதன், 80வது ஆண்டு வெற்றி விழா கொண்டாட்டம் தலைநகர் மாஸ்கோவில் நடைபெறவுள்ள நிலையில் 8-10 திகதிளில் மூன்று நாள் போர் நிறுத்தத்திற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார்.
மனிதாபிமானக் கருத்தாய்வுகளின் அடிப்படையில் இந்த போர்நிறுத்தம் மே 8 ஆம் திகதி நள்ளிரவில் ஆரம்பித்து 72 மணித்தியாலங்கள் தொடரும் என்று கிரெம்ளின் தெரிவித்துள்ளது.
இந்த போர் நிறுத்தத்தை கடைப்பிடிக்க ரஷ்யாவும், உக்ரைனை வலியுறுத்தியுள்ளது.
இந்த காலகட்டத்தில், அனைத்து ராணுவ நடவடிக்கைகளும் நிறுத்தப்படும். போர் நிறுத்தத்தை மீறி உக்ரைன் படையினர் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.
மூன்று வருட போரை முடிவுக்குக் கொண்டுவர துப்பாக்கிச் சூட்டை நிறுத்துங்கள் என்றும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுங்கள் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புடினை வலியுறுத்தியதை அடுத்து இந்த அறிவிப்பு வந்தது.
இதேவேளை, புடின் ஈஸ்டர் தினத்திற்கு 30 மணி நேர போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.