பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து நீதி விசாரணை கோரும் மனுவை விசாரணைக்கு ஏற்க இந்திய உயர் நீதிமன்றம் இன்று (01)மறுத்துவிட்டது.
அத்தகைய நடவடிக்கை படைகளின் மன உறுதியை குலைக்கும் என்று கூறிய உயர் நீதிமன்றம், மனுதாரர்களைக் கடுமையாக சாடியதுடன், அத்தகைய மனுவைத் தாக்கல் செய்வதற்கு முன்பு இந்தப் பிரச்சினையின் “உணர்திறனை” ஆராய்ந்திருக்க வேண்டும் என்று கூறியது.
இதுபோன்ற பொதுநல வழக்குகளை தாக்கல் செய்வதற்கு முன் பொறுப்புடன் இருங்கள்.
உங்கள் நாட்டிற்கும் உங்களுக்கு சில கடமைகள் உள்ளன.
பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட ஒவ்வொரு இந்தியரும் கைகோர்த்திருக்கும் முக்கியமான நேரம் இது.
படைகளை மனச்சோர்வடையச் செய்யாதீர்கள்.
பிரச்சினையின் உணர்திறனைப் பாருங்கள் – என்று நீதிபதி சூர்யா காந்த் மனு மீதான தீர்ப்பின் போது கூறினார்.
பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டது குறித்து விசாரிக்க நீதித்துறை ஆணையம் அமைக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது.
நீதிபதிகளின் பணி சர்ச்சைகளை முடிவு செய்வதே தவிர விசாரணைகளை நடத்துவது அல்ல என்று நீதிமன்றம் கூறியது.