அவுஸ்திரேலியாவில் பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சியின் ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்த நிலையில் இன்று(03) பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு மற்றும் வீட்டுவசதி பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகள் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சிக்கு பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே திர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு தேர்தலில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியை ஆதரிக்காத 19 எம்.பி.க்கள் அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்கு தெரிவாகினர்.
இந்நிலையில், இந்த ஆண்டு பொதுத்தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதில் அணிசேரா எம்.பி.க்கள் முக்கிய பக்கு வகிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.