அம்பாறை, பதியதலாவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர், தனது சேவை துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று (06) அதிகாலை 05.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அவர் பணியில் இருந்தபோது தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் பிபில பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
அவர் அடுத்த ஆண்டு ஓய்வு பெற திட்டமிடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், சார்ஜெண்டின் மனைவி கடந்த ஆண்டு புற்றுநோயால் இறந்ததாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பதியத்தலாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.