இலங்கையில் 339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 8,287 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று (06) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.
வாக்காளர்கள் இன்று மாலை 4.00 மணி வரை வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்..
இன்று (06) காலை 10 மணி நிலவரப்படி, பல மாவட்டங்களில் வாக்குப்பதிவு 20 சதவீதத்தைத் தாண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி,
வவுனியா – 35%
மாத்தளை -25%
முல்லைத்தீவு – 25%
அம்பாறை -25%
மன்னார் – 23%
மொனராகலை -23%
பதுல்லா – 22%
கிளிநொச்சி – 22%
கண்டி 21%
மாத்தறை -21%
திருகோணமலை -21%
அனுராதபுரம் -21%
பொலன்னறுவை – 21%
கம்பஹா – 20%
களுத்துறை – 20%
நுவரா எலியா – 20%
ரத்னபுரா – 20%
கேகாலை -20%
குருநாகல் – 20%
புத்தளம் – 20%
காலி – 19%
அம்பாந்தோட்டை -19%
கொழும்பு 18.9%
யாழ்ப்பாணம் – 18%