கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பேருந்தில் கசிப்புக் கடத்திச் சென்றவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நபர் ஒருவர் பேருந்தில் கசிப்பு கடத்திச் செல்வதாகப் பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்தே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த நபரின் பயணப் பையில் இருந்து 22 லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.