நாட்டின் முக்கிய உள்ளூராட்சி மன்றங்களில் ஒன்றான கண்டி மாநகர சபையில் பெரும்பான்மை இடங்களை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.
கண்டி மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி மொத்தம் 24 இடங்களை கைப்பற்றியுள்ளது. அதே நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி 11 இடங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சர்வஜன பலய முறையே 6 மற்றும் 2 இடங்களைப் பெற்றுள்ளன.
கண்டி மாவட்டத்தின் கண்டி மாநகர சபை யின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தி (NPP) – 21,566 (24 இடங்கள்)
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 12,906 (11 இடங்கள்)
ஐக்கிய தேசியக் கட்சி (UNP) – 6,257 (6 இடங்கள்)
சர்வஜன பலய (SB) – 1,836 (2 இடங்கள்)
இதேவேளை கண்டி மாவட்டத்தின் அக்குரனை பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தி 14,638 வாக்குகளைப் பெற்று 13 இடங்களைப் பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி 11,492 வாக்குகளைப் பெற்று 10 இடங்களைப் பெற்றுள்ளது.
சுயேச்சை குழு 2 1,982 வாக்குகளைப் பெற்று 2 இடங்களைப் பெற்றுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 1,756 வாக்குகளைப் பெற்று ஒரு இடத்தைப் பெற்றுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 1,416 வாக்குகளைப் பெற்று ஒரு இடத்தைப் பெற்றுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1,365 வாக்குகளைப் பெற்று அக்குரனை பிரதேச சபையில் ஒரு இடத்தைப் பெற்றுள்ளது.
சுயேச்சை குழு 1 மற்றும் ஐக்கிய தேசியக் கூட்டணியும் தலா ஒரு இடத்தைப் பெற்றுள்ளன.