பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பெற்று வரும் அனைத்து நலன்களையும், சலுகைகளையும் தடை செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
இதற்கமைய மருந்து ஏற்றுமதியை நிறுத்துமாறும் உத்தரவிடப்பட்ட நிலையில் அந்த நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக இந்தியாவின் தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி மாநில மருந்து உற்பத்தியாளா்கள் சங்கதின் தலைவா் வைத்தியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தமிழகத்திலிருந்து மாத்திரம் வருடாந்தம் 8,000 கோடி ரூபாவிலிருந்து 10,000 கோடி ரூபா வரையிலான மதிப்புடைய மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அதில் 100 கோடி ரூபா மதிப்புள்ள சில முக்கிய மருந்துகளுக்கான மூலப்பொருள்கள் இந்தியவில் இருந்து பாகிஸ்தானுக்கு, அனுப்பப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், மத்திய அரசின் அறிவுறுத்தலின்படியும், தேச நலனைக் கருத்திற் கொண்டும் பாகிஸ்தானுக்கு மருந்து மற்றும் மூலப்பொருள் ஏற்றுமதியை நிறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, தமிழகத்துக்கு தேவையான சில மூலப்பொருள்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதக்கவும் அதில் எந்த பிரச்சனையும் இல்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
















