வாழைச்சேனை துறைமுகத்தில் மீனவர்களால் இன்று (13) மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க ஆழ்கடலுக்குச் செல்லும் மீனவர்களின் பெறுமதி மிக்க வலைகள் மீன்களுடன் கடற்கொள்ளையர்களால் திருடப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டி மீனவர்களால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தொடராக மேற்கொள்ளப்பட்டு வரும் இத் திருட்டுச் சம்பவத்தால் மீனவர்களும், படகு உரிமையாளர்களும் பாரிய நஷ்டங்களை எதிர்நோக்கி வருவதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான கடற்கொள்ளை கும்பலிடமிருந்து மீனவர் சமூகம் பாதுகாக்கப்பட வேண்டும் எனக் கோரியும் அதற்கான தீர்வினைப் பெற்றுத் தர வேண்டும் எனவும் மீனவர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களால் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.















