பொலிஸாருடனான மோதல்களிலும், பொலிஸ் நிலையங்களிலும் ஏற்படும் மரணங்களைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட பொதுவான வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகளின் தொகுப்பை இலங்கை மனித உரிமைகள் ஆணையம் (HRCSL) வெளியிட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டின் பொது வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகள் எண் 1 இன் கீழ் வெளியிடப்பட்ட இந்த வழிகாட்டுதல்கள், பொலிஸழருக்கு வழங்கப்பட்டுள்ளதாக HRCSL தெரிவித்துள்ளது.
ஆணையத்தால் பெறப்பட்ட முறைப்பாடுகள் மீதான விசாரணைகளின் அடிப்படையில், 2025 ஜனவரி 2020 முதல் மார்ச் 31, வரை பொலிஸ் காவலில் 49 மரணங்களும், பொலிஸாரின் என்கவுன்டர்களில் 30 மரணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதனை கருத்திற் கொண்டே, மனித உரிமைகள் ஆணையம் இந்த வழிகாட்டுதல்களையும் பரிந்துரைகளையும் வெளியிட்டுள்ளது என்று அதன் தலைவர் நீதிபதி எல்.டி.பி. தெஹிதெனியா தெரிவித்தார்.
வழிகாட்டுதல்களை திறம்பட செயல்படுத்த, பரிந்துரைகளைப் பின்பற்ற பொலிஸ்துறை ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று தெஹிதெனியா மேலும் வலியுறுத்தினார்.














