கட்டுநாயக்க விமான நிலையத்தில் 7.15 கிலோ குஷ் கஞ்சாவுடன் ஐந்து பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நபர்கள் நேற்று தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து வருகை தந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் கொழும்பு 15, கொழும்பு 02 மற்றும் தெமட்டகொடை ஆகிய இடங்களில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.