இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று (02) கைது செய்யப்பட்ட தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக சேபாலவை எதிர்வரும் ஜூன் மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏலத்தின் போது அதிக விலைக்கு ஏலம் கேட்டவருக்குப் பதிலாக, குறைந்த விலைக்கு ஏலம் கேட்டவருக்கு குறித்த ஏலத்தை வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு 2.38 மில்லியன் ரூபா இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டுக்கு அமைவாக தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் முன்னாள் நகர சபை தலைவர் இன்று (02) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.