மல்வானை பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவ ஆய்வகத்திற்கு மஹர நீதிவான் நீதிமன்றம் 500,000 ரூபா அபராதம் விதித்துள்ளது.
முழு இரத்த எண்ணிக்கை (FBC) பரிசோதனைக்கு அங்கீகரிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகம் வசூலித்த குற்றச்சாட்டுக்காகவே குறித்த ஆய்வகத்திற்கு இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார ஆணைய விதிமுறைகளை மீறி, நோயாளியிடமிருந்து அதிக கட்டணம் வசூலித்ததாக ஆய்வகம் ஒப்புக்கொண்டதை அடுத்து இந்த அபராதம் விதிக்கப்பட்டது.
FBC சோதனைக்கான அதிகபட்ச கட்டணம் 400 ரூபாவாகும்.
எனினும், குறித்த ஆய்வகம் அதிற்கும் அதிகபடியான கட்டணத்தை வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

















