மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தேசிய வீரர்களுக்கான 2024 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் விருதுகள் (Home Lands Sri Lanka Cricket Awards) வழங்கும் நிகழ்வானது நேற்று (09) நடைபெற்றது.
கொழும்பு “City of Dreams” ஹோட்டலில் நேற்றிரவு நடைபெற்ற நிகழ்வானது சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் கிரிக்கெட் சகோதரத்துவத்தின் புகழ்பெற்ற கூட்டத்தை ஒன்றிணைத்தது.
இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழுவின் சார்பாக இலங்கை கிரிக்கெட் (SLC) தலைவர் திரு. ஷம்மி சில்வாவின் அழைப்பைத் தொடர்ந்து, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
நிகழ்வில் தேசிய அணித் தலைவர்கள், தற்போதைய மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், இராஜதந்திரிகள், பெருநிறுவனத் தலைவர்கள், நிகழ்வு ஆதரவாளரின் பிரதிநிதிகள் மற்றும் முன்னாள் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் மொத்தம் 46 விருதுகள் வழங்கப்பட்டன.
சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்குபவர்களை கௌரவிக்கும் 18 விருதுகள் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறந்து விளங்குபவர்களை கௌரவிக்கும் 20 விருதுகளும் இதில் உள்ளடக்கம்.
ஆண்டின் சிறந்த போட்டி நடுவர் மற்றும் ஆண்டின் சிறந்த நடுவர் ஆகியோரும் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.
விளையாட்டின் மேம்பாட்டிற்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய ஆறு பேருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.
ஆண்டின் ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் வீரர் விருது வழங்குவது நிகழ்வின் இரவில் ஒரு சிறப்பம்சமாக அமைந்தது.
வழங்கப்பட்ட விருதுகளின் சில விபரம்:
மகளிர் டி:20 கிரிக்கெட்டின் சிறந்த துடுப்பாட்ட வீரர் – சாமரி அத்தபத்து
மகளிர் டி:20 கிரிக்கெட்டின் சிறந்த பந்து வீச்சாளர் – சாமரி அத்தபத்து
மகளிர் டி:20 கிரிக்கெட்டின் சிறந்த சகலதுறை வீரர் – சாமரி அத்தபத்து
மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டின் சிறந்த துடுப்பாட்ட வீரர் – சாமரி அத்தபத்து
மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டின் சிறந்த பந்து வீச்சாளர் – கவீஷா தில்ஹாரி
மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டின் சிறந்த சகலதுறை வீரர் – சாமரி அத்தபத்து
ஆடவர் டி:20 கிரிக்கெட்டின் சிறந்த துடுப்பாட்ட வீரர் – குசல் மெண்டீஸ்
ஆடவர் டி:20 கிரிக்கெட்டின் சிறந்த பந்து வீச்சாளர் – வனிந்து ஹசரங்க
ஆடவர் டி:20 கிரிக்கெட்டின் சிறந்த சகலதுறை வீரர்- வனிந்து ஹசரங்க
ஆடவர் ஒருநாள் கிரிக்கெட்டின் சிறந்த துடுப்பாட்ட வீரர் – பத்தும் நிஸ்ஸங்க
ஆடவர் ஒருநாள் கிரிக்கெட்டின் சிறந்த பந்து வீச்சாளர் – வனிந்து ஹசரங்க
ஆடவர் ஒருநாள் கிரிக்கெட்டின் சிறந்த சகலதுறை வீரர் – சரித்த அசலங்க
ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த துடுப்பாட்ட வீரர் – கமிந்து மெண்டீஸ்
ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த பந்து வீச்சாளர் – பிரபாத் ஜயசூரிய
ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த சகலதுறை வீரர் – தனஞ்சய டிசில்வா
ஆடவர் கிரிக்கெட்டின் சிறந்த வளர்ந்து வரும் வீரர் – ஜனித் லியனகே
ஆண்டின் சிறந்த மகளிர் கிரிக்கெட் வீரர் – சாமரி அத்தபத்து
ஆண்டின் சிறந்த ஆடவர் கிரிக்கெட் வீரர் – கமிந்து மெண்டீஸ்