கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (11) பத்து மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளது.
இதன்படி, பேலியகொட, வத்தளை, ஜா-எல மற்றும் கட்டுநாயக்க-சீதுவ நகர சபைப் பகுதிகள் மற்றும் களனி, பியகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவங்கொட மற்றும் கம்பஹா பிரதேச சபைப் பகுதிகளுக்கு இன்று காலை 08:30 மணி முதல் மாலை 06:30 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும்.
பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் சூரிய மின்சக்தி மின் கட்டமைப்பை பிரதான மின் கட்டமைப்புடன் இணைப்பு, அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக NWSDB குறிப்பிட்டுள்ளது.