அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் மேற்கொண்டதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்க நகரங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக நியூயோர்க் நகர பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில், நகரில் உள்ள முக்கிய இடங்கள், மத வழிபாட்டுத் தளங்கள், கலாசார மற்றும் தூதரக மையங்கள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று வொஷிங்டன், கொலம்பியா, லொஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட மாகாணங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.