ஈரானின் 6 விமான நிலையங்களில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
இத்தாக்குதலில் ஈரான் நாட்டின் 15 போர் விமானங்கள், ஹெலிகொப்டர்கள் அழிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் இராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களை எதிர்கொள்ளும் ஈரானின் திறனைக் குறைப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என்றும், இலக்கு வைக்கப்பட்ட தளங்களில் பார்சின் மற்றும் தெஹ்ரான் விமானத் தளங்களும் அடங்கும் எனவும் இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்தத் தாக்குதலை ஈரான் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.