யாழில். இரவு உணவு அருந்திய பின் படுக்கைக்கு சென்றவர் காலையில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் உள்ள தோட்டக்கிணறு ஒன்றில் இருந்து பெண்ணொருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சுதந்திரபுரம் பகுதியை சேர்ந்த கிருபாமூர்த்தி கலா என்ற 53 வயதான பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் இரவு உணவருந்தி விட்டு உறக்கத்துக்குச் சென்றுள்ள நிலையில் காலையில் அவரைக் காணவில்லை என உறவினர்கள் தேடியுள்ளனர் எனவும், இதனையடுத்து அவர் அப்பகுதியில் உள்ள கிணறொன்றில் இருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார் எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.