அரசியலில் நுழைவதை தான் ஒருபோதும் விரும்பவில்லை. ஆனால், வருங்காலத்தில் ஆபத்துகள் அதிகமாக இருப்பதால் வேறு வழியே இல்லாமல்,இந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிலை உருவானது என டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எலான் மஸ்க், எனக்கு அரசியலில் நுழைவது என்பதில் சற்றும் விருப்பமில்லை. நான் ரொக்கெட் தயாரிக்கிறேன், கார்களை, கருவிகளை உருவாக்குகிறேன்.
என் நிறுவனம் தயாரிக்கும் பொருட்களை மக்கள் பயன்படுத்துவதைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். அதைத் தவிர வேறு எனக்கு எதிலும் ஆர்வமில்லை. ஆனால், எப்போது, இந்த நாட்டின் அமைப்பு மிக மோசமாக உடைந்து போயிருக்கிறதோ, அப்போது என்னால் அமைதியாக இருக்க முடியாது எனவும்
நாட்டின் எதிர்காலத்துக்கு மோசமான ஆபத்துகள் காத்திருக்கும் என்பதால் வேறு வழியின்றி, அரசியல் கட்சியை தொடங்குவது என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறேன் எனவும் கூறியிருந்தார்.

















