இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் நேற்றையதினம் நூற்றுக்கணக்கான மக்களை ஏற்றிச் சென்ற பயணிகள் கப்பல் ஒன்று கடலில் தீப்பிடித்து எரிந்ததில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி கடற்கரையில் “கிரிகோரியஸ் பார்சிலோனா” எனும் சொகுசு கப்பலிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தலாவுட் தீவுகளில் இருந்து மனாடோவுக்குச் செல்லும் பாதையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதுடன் குறித்த விபத்தில் 280க்கும் மேற்பட்டோர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதுடன், தொடர்ந்தும் மீட்பு பணிகள் இடம்பெற்று வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, உயிரிழந்தவர்களில் கர்ப்பிணி பெண் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சம்பவம் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



















