”காசாவில் சிறைபிடிக்கப்பட்ட தங்கள் நாட்டு பணயக் கைதிகளுக்கு தேவையான உதவிகளைச் செய்து கொடுக்க, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (International Committee of the Red Cross) முன்வர வேண்டும்” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார்.
கடந்த இரண்டரைக்கு ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நீடித்து வருகிறது. கடந்த 2023ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் படையினர் பலரை சுட்டுக் கொன்றதுடன், 250 பேரை பணயக் கைதிகளாக பிடித்து சென்றுள்ளனர்.
இவ்வாறு பிடித்துச் செல்லப்பட்ட பயணக் கைதிகளில் பலர் இறந்து விட்ட நிலையில், சிலர் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் 49 பேர் ஹமாஸ் படையினரின் பிடியில் சிக்கியுள்ளனர். இந்நிலையில் பணயக் கைதிகளை விடுவிக்கக் கோரி ஹமாஸ் அமைப்பின் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனிடையே, சிறைபிடிக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளை சந்திக்க ஹமாஸ் அனுமதிக்க வேண்டும் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
















