கிளிநொச்சி கொழுந்துப்புலவு பகுதியில் சிவில் பாதுகாப்பு திணைக்கள பண்ணையில் அமைக்கப்பட்ட சட்டவிரோத குளம் காரணமாக மயில்வாகனபுரம் கிராம மக்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன், கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப்பணிப்பாளர் கிளிநொச்சி கிழக்கு நீர்ப்பாசன பொறியியலாளர் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இன்று அப்பகுதிக்கு கள விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்
அங்குள்ள நிலைமைகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளதுடன் பல பகுதிகள் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்படுகின்ற நிலையில் உரிய பொறிமுறையினை உருவாக்குமாறு நீர்ப்பாசன திணைக்களத்திடம் தொழில்நுட்ப அறிக்கை கோரப்பட்டுள்ளது.














