• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
நிபந்தனைகளை இஸ்ரேல் பூர்த்தி செய்தால் பணயக்கைதிகளுக்கு உதவ தயார் – ஹமாஸ் தெரிவிப்பு!

நிபந்தனைகளை இஸ்ரேல் பூர்த்தி செய்தால் பணயக்கைதிகளுக்கு உதவ தயார் – ஹமாஸ் தெரிவிப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/08/04
in உலகம், முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
988
VIEWS
Share on FacebookShare on Twitter

இஸ்ரேல் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்தால், காசாவில் வைத்திருக்கும் பணயக்கைதிகளுக்கு உதவி வழங்க செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக ஹமாஸ் ஞாயிற்றுக்கிழமை (04) தெரிவித்துள்ளது.

2023 அக்டோபர் 7 முதல் சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேலிய பணயக்கைதி எவியதார் டேவிட்டின் இரண்டு காணொளிக்களை வெளியிட்டதற்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், ஹமாஸ் குழுவின் இந்த அறிக்கை வந்துள்ளது.

காணொளியில் தற்போது 24 வயதான பணயக்கைதி எலும்புக்கூடு போல் தோற்றமளிக்கிறார்.

அவரது தோள்பட்டையில் காயத்தின் தழும்புகள் காணப்படுகின்றன.

இந்த காட்சிகள் பெரும் விமர்சனத்தைத் தூண்டின, ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் இந்த காணொளிகள் “பயங்கரமானவை” என்று முத்திரை குத்தினார்.

மேலும் அவை “ஹமாஸின் காட்டுமிராண்டித்தனத்தை அம்பலப்படுத்துகின்றன” என்று கூறினார்.

இதனிடையே ஞாயிற்றுக்கிழாமை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பணயக்கைதிகளுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குமாறு செஞ்சிலுவைச் சங்கத்திடம் கோரியுள்ளார்.

இந் நிலையில் இது குறித்து பதிலளித்துள்ள ஹமாஸின் இராணுவ செய்தித் தொடர்பாளர் அபு ஒபெய்தா,

எதிரி கைதிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை வழங்குவதற்காக செஞ்சிலுவைச் சங்கத்தின் எந்தவொரு கோரிக்கைக்கும் நேர்மறையாக ஈடுபடவும் பதிலளிக்கவும் தயாராக உள்ளோம்.

ஆனால், இஸ்ரேல் நிரந்தரமாக ஒரு மனிதாபிமான வழித்தடத்தைத் திறப்பது, உதவி விநியோகிக்கப்படும்போது வான்வழித் தாக்குதல்களை நிறுத்துவது உள்ளிட்ட சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் பட்டினி அல்லது ஊட்டச்சத்து குறைபாட்டால் மேலும் ஆறு பேர் இறந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

போர் தொடங்கியதிலிருந்து இந்த எண்ணிக்கை 175 ஆக அதிகரித்துள்ளது.

இதில் 93 சிறுவர்களும் அடங்குவர்.

பல சர்வதேச நிறுவனங்கள் பிரதேசம் முழுவதும் பஞ்சம் பரவி வருவதாக எச்சரித்துள்ளன.

இஸ்ரேலிய முற்றுகை காரணமாக கடந்த மார்ச் 2 முதல் மே 19 வரை காசாவிற்குள் எந்த உதவியும் வரவில்லை – அன்றிலிருந்து உணவு, மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட பொருட்களை வழங்குவது குறைவாகவே உள்ளது.

இதற்கிடையில், பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் நேற்று காசாவில் குறைந்தது 80 பேர் இஸ்ரேலிய துப்பாக்கிச் சூடு மற்றும் வான்வழித் தாக்குதல்களால் இறந்ததாகவும் கூறினர்.

Related

Tags: இஸ்ரேல்பணயக்கைதிகள்ஹமாஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பணயக்கைதிகளை பாதுகாக்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியை நாடிய இஸ்ரேல்

Next Post

வடமாகாணத்தில் நிலவும் கல்விசார் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்! -பிரதமர் ஹரிணி அமரசூரிய

Related Posts

சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?
உலகம்

சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

2026-01-28
ஹோட்டல் அறையிலிருந்து மீட்கப்பட்ட சடலம்!
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

2026-01-28
சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாளாகவே இருந்துவருகின்றது-அமலராஜ் அமலநாயகி
இலங்கை

சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாளாகவே இருந்துவருகின்றது-அமலராஜ் அமலநாயகி

2026-01-28
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடுமையான கண் நோயினால் பாதிப்பு
உலகம்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடுமையான கண் நோயினால் பாதிப்பு

2026-01-28
தரமற்ற நிலக்கரி விநியோகத்திற்காக அபராதம் !
இலங்கை

தரமற்ற நிலக்கரி விநியோகத்திற்காக அபராதம் !

2026-01-28
2026 ஆம் ஆண்டிற்காகப் புதுப்பிக்கப்பட்டுள்ள உலக அழிவு கடிகாரம்!
உலகம்

2026 ஆம் ஆண்டிற்காகப் புதுப்பிக்கப்பட்டுள்ள உலக அழிவு கடிகாரம்!

2026-01-28
Next Post
பெரியவர்களான நாம் தவறவிட்ட பல பாடங்கள் உள்ளன! -பிரதமர்

வடமாகாணத்தில் நிலவும் கல்விசார் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்! -பிரதமர் ஹரிணி அமரசூரிய

ஒக்கம்பிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்!

ஒக்கம்பிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்!

இன்ஸ்டாகிராமில் புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது மெட்டா!

இன்ஸ்டாகிராமில் புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது மெட்டா!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

0
சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

0
சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

0
பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

0
விஜய் பட டைட்டிலை மிஸ் செய்த டூரிஸ்ட் பேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.